Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 13, 2019

நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா..? ரத்து செய்யப்படாதா..? பியூஷ் கோயல் பேட்டி


சென்னை: நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை என தமிழக பாஜ பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்தார்.



சென்னையில் செய்தியாளர்களுக்கு பியூஷ் கோயல் இன்று அளித்த பேட்டியில், நீட் தேர்வு ரத்து செய்யப்படாது. நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை என்றும், நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டோம் என்றார்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய தேவையில்லை. நீட் தேர்வை தொடர்ந்து நடத்த அதிமுகவை சமாதானப்படுத்துவோம். அடுத்து அமையும் மோடி தலைமையிலான அரசில் தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும் என்றார் பியூஷ் கோயல்.



இந்நிலையில், நீட் தேர்வு தேவையா? தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்ய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருக்கிறோம். மக்களின் குரலை கேட்கிறோம்; கருத்துப் பரிமாற்றங்களை கேட்கிறோம் என சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.



இதிலிருந்து மக்களாகிய நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நீட் தேர்வை இரு தேசிய கட்சிகளுமே ஏற்றுக்கொள்கிறது. தேர்தலுக்காகவும், மாநில கூட்டணி கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே தேசிய கட்சிகள் நாடகம் ஆடுகிறது என்பது தெளிவு.