பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறைகளில் மாற்றம்? தமிழுக்கு ஆபத்தா? அமைச்சர் பரபரப்பு விளக்கம்


சென்னை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மொழிப்பாடம் என்பது ஒன்று மட்டுமே இருக்கும் என வெளியான தகவல் தவறானது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும் நிலையில் அதை 500-ஆக குறைக்க பள்ளிக் கல்வித் துறை முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுக்கும் அத்துறை பரிந்துரை செய்துள்ளது.


100 மதிப்பெண்ணை எப்படி குறைப்பது என பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை செய்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் தமிழ் அல்லது ஆங்கிலம், ஆகிய இரு மொழிகளில் ஏதாவது ஒன்றை மட்டுமே மாணவர்கள் விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற பரிந்துரையை பள்ளிக் கல்வித் துறை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலும் தமிழை எழுத அவதிப்படும் ஆங்கில வழி கல்வி மாணவர்கள் தமிழை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. மேலும் வருங்காலத்தில் தமிழகத்தில் பிறந்த மாணவர்கள் தமிழை கற்காத நிலை ஏற்பட்டுவிடும் என எதிர்ப்பு எழுந்தது.தமிழ் எழுத்துகள்
தமிழ் ஆர்வலர்கள்

ரயில் நிலையங்களில் தமிழ் எழுத்துகளை அழித்தது போல் தமிழ் மொழியை நிராகரிக்க வழி ஏற்படுத்துவதாகவும் தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.


மொழிப்பாடம்
தகவல் பொய்யானது

இந்த நிலையில் இந்த தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். மொழிப்பாடம் குறித்து தற்போது பரவி வரும் தகவல் பொய்யானது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மையில்லை.
குழப்பம் வேண்டாம்
மாணவர்களே குழப்பம் வேண்டாம்

தமிழகத்தை பொருத்தமட்டில் 6 பாடத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். இரண்டு மொழிப்பாடத்திட்டங்களே தமிழகத்தில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். எனவே மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றை படித்தே ஆக வேண்டும். இதனால் யாரும் குழப்பமடைய வேண்டாம் என அமைச்சர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார்.