Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 27, 2019

10ம் வகுப்பு சான்றிதழில், பெற்றோர் கையெழுத்திட வேண்டியது கட்டாயம்

10ம் வகுப்பு சான்றிதழில், பெற்றோர் கையெழுத்திட வேண்டியது கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் தேர்வெழுதும் மாணவர்கள், சான்றிதழ் பெற்ற பின், அதில், தங்களின் சுய விபரங்களில் பிழை இருப்பதாக, புகார் கூறுகின்றனர். சான்றிதழ்களில் தவறாக உள்ள விபரங்களை சரி செய்யுமாறு, சி.பி.எஸ்.இ.,க்கு மனு அளிக்கின்றனர். இதனால், அலுவல் நேரம் வீணடிக்கப்படுகிறது.

மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே, சரியான விபரங்களை பள்ளிகளுக்கு வழங்குமாறும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதை உறுதி செய்யு மாறும், சி.பி.எஸ்.இ., அறிவித்தது. ஆனாலும், சான்றிதழ்களில் பிழைகள் அதிகமாகின.இதையடுத்து, புதிய சீர்திருத்தங்களை, இந்த கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., அறிமுகம் செய்துள்ளது.அதன்படி, அனைத்து மாணவர்களின் விபரங்களையும், பெற்றோர், மாணவர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் படித்து பார்த்து, சுய விபரங்கள் சரியாக உள்ளதாக, விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த விண்ணப்பத்தின் படி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. சான்றிதழ்களை பெறும் போதும், பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும், சான்றிதழ்களில் உள்ள விபரங்களை படித்து பார்த்து, அவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கையெழுத்திட வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.