கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில், ஆறு வார கோடைக்காலப் பயிற்சித்திட்டம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.05.2019


கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், எம்.எஸ்.சி மாணவர்களுக்கு ஆறு வார கோடைக்கால பயிற்சி திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு எம்.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.05.2019
கோடைக்கால பயிற்சி நடைபெறும் நாட்கள்: ஜூன் - 03, 2019 முதல் ஜூலை - 12, 2019கோடைக்கால பயிற்சி: ஆறு வாரங்கள்

கல்வித்தகுதி:
பி.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பில், நன்கு பயின்று முதல் தர வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். 2019-20 ஆம் கல்வியாண்டில், முதலாமாண்டு எம்.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

குறிப்பு:
2019-20 ஆம் ஆண்டு கடைசி வருடம் எம்.எஸ்.சி (இயற்பியல் / வேதியியல்) பட்டப்படிப்பு பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://forms.gle/DbRbbac1zQMBahmFA - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். அந்த விண்ணப்பத்தில் 'Physics and
Chemistry of Nanomaterials - My Perspective' - என்ற தலைப்பின் கீழ் கட்டுரையாக, அதிகபட்சம் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் சொந்தமாக எழுத வேண்டும்.

தேர்வு பெறும் மாணவர்களுக்கான சலுகைகள்:
1. ஆறு மாதத்திற்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2. மாணவர்கள் தங்குவதற்கு தேவையான செலவிற்கும் மானியம் வழங்கப்பட உள்ளது.
3. ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பயண சலுகை உண்டு.

மேலும், இது குறித்த தகவல்களை பெற, http://www.igcar.gov.in/igc2004/STIPAC_2019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பயிற்சி குறித்து எழும் சந்தேகங்களை, physics@igcar.gov.in / chemistry@igcar.gov.in - என்ற இ.மெயில் முகவரியில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.