பிளஸ் 1 மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாளாகும்.
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த 8-ஆம் தேதி வெளியானது. இதில் 95 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு மாணவ, மாணவிகள் கடந்த வெள்ளிக்கிழமை (மே 10) முதல் பள்ளிகள் மற்றும் தனித்தேர்வு மையங்கள் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 13) முடிவடையவுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


நாளை மதிப்பெண் பட்டியல்: தேர்வர்கள், தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக செவ்வாய்க்கிழமை (மே 14) தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் வியாழக்கிழமை (மே 16) பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத்தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.