பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு முடிவு.. கணினி அறிவியல் பாடத்தில் மாணவர்கள் அசத்தல் தேர்ச்சி


சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.நடப்பாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வில் 95% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 98 % தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தில் உள்ளது 93.3% மாணவர்கள் தேர்ச்சி, 96.5% மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது பாடவாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பார்க்கலாம்:

இயற்பியல்: 94.6%

வேதியியல்: 95.7%

உயிரியியல்: 97.1%

கணிதம்: 96.9%தாவரவியல்: 91.1%

விலங்கியல்: 93%

கணினி அறிவியல்: 98.2%

வணிகவியல்: 97.7%

கணக்குப்பதிவியல்: 97.7%