புதிய பாட திட்டத்தில் முதல் பிளஸ் 1 தேர்வு

புதிய பாட திட்டத்தில் நடந்த, முதல் பிளஸ் 1 தேர்வில், இந்த ஆண்டு, 95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018 விட, 3.7 சதவீதம் அதிக தேர்ச்சி கிடைத்துள்ளது; மாணவியர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 6 முதல், 22 வரை நடந்தது. மாணவர்களை விட, மாணவியர், 3.2 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர். மாற்று திறனாளி மாணவர்களில், 2,896 பேர் தேர்வு எழுதி, 2,721 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறை கைதிகள், 78 பேர் தேர்வு எழுதி, 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த தேர்வில், 7,276 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர். அவற்றில், 2,634 பள்ளிகளுக்கு, 100 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது. அரசு பள்ளிகள், 90.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில், மெட்ரிக் பள்ளிகள், 99.1 சதவீதத்துடன், தேர்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளன.பிளஸ் 1 பொது தேர்வு, 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, பழைய பாட திட்டமே நடைமுறையில் இருந்தது. ஆனால், தேர்வு முறை மட்டும் மாற்றப்பட்டது. ஒவ்வொரு பாடத்துக்கும், மொத்த மதிப்பெண், 200க்கு பதில், 100 ஆகவும்; 'ப்ளூ பிரின்ட்' இல்லாத முறையும் அறிமுகம் ஆனது.மாற்றம்இந்த ஆண்டு, பிளஸ் 1 பொது தேர்வு, புதிய பாட திட்டத்தில் நடத்தப்பட்ட முதல் தேர்வாகும்.

அதாவது, தேர்வு முறை மாற்றம், ப்ளூ பிரின்ட் இல்லாத தேர்வு முறை, கடினமான விடை திருத்தம் மற்றும் புதிய பாட திட்டம் அமல் என, அனைத்து மாற்றங்களும் ஒருங்கிணைந்த, முதல் தேர்வாக கருதப்படுகிறது.இதில், தேர்ச்சி சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலானவர்களுக்கு தேர்ச்சி கிடைத்துள்ளது.கொங்கு மண்டலம் தொடர் சாதனைஇந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வில், மாநில அளவில், ஈரோடு மாவட்டம், 98 சதவீதம் தேர்ச்சி பெற்று, முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர், 97.9 மற்றும் கோவை, 97.6 சதவீதத்துடன், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. 2018ம் ஆண்டிலும், இந்த மூன்று மாவட்டங்களே, முதல் மூன்று இடங்களை பெற்றன