பிளஸ் 1 தேர்வு முடிவுகள்- இணைதள முகவரி


பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 6 -ஆம் தேதி தொடங்கி 22 -ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ - மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.இந்நிலையில் பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மாணவ, மாணவிகள் tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.gov.in ஆகிய இணைதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.