திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு சேர்க்கை விண்ணப்பிக்க மே 29 கடைசி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில்., பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
பல்கலைக்கழகத்தில் தமிழ், வரலாறு, மேலாண்மையியல், இயற்பியல், புவியியல், நாடகம் மற்றும் அரங்கவியல், உளவியல், சமூகவியல், குற்றவியல் மற்றும் குற்றம்சார் நீதி நிர்வாகவியல், கல்வியியல், மின்னணு ஊடகவியல் ஆகிய துறைகளின் எம்.ஃபில். படிப்பு முழு நேரம், பகுதி நேரப் படிப்புகளாக வழங்கப்படுகின்றன.


அதுபோல, தமிழியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், மேலாண்மையியல், புவியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கல்வியியல், மின்னணு ஊடகவியல் ஆகிய துறைகளின் கீழ் பி.எச்டி. படிப்பு வழங்கப்படுகிறது.
யுஜிசி-நெட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் நிதியுதவியுடன் பி.எச்டி. படிப்பை மேற்கொள்ள முடியும்.
விண்ணப்பப் படிவம், விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


விண்ணப்பிக்க மே 29 கடைசி நாள் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.