பொறியியல் படிப்பில் சேர 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் உள்ள 509 கல்லூரிகளில் 502 கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அண்ணா பல்கலை கழகத்திடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்.


கல்லூரிகளில் அதிக கட்டணம் குறித்த புகார்களை அளிக்க கூடுதல் இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த உயர்கல்வித்துறை செயலாளர், கல்லூரிகளில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.