இன்னும் 4 நாள் அவகாசம். இலவச கல்வியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க.!


இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர்ப்பதற்காக 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக வரும் மே மாதம் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கப்பட்டிருந்தது


இந்நிலையில் குறைந்த எண்ணிக்கையில் இத்திட்டத்தின் கீழ் பெற்றோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவகாசம் முடிய இன்னும் 4 நாட்கள் இருப்பதால் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளை எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு பெற்றோர்கள் முன் வரவேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்