பி.இ. கலந்தாய்வு: உதவி மையங்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு: சென்னையில் கூடுதலாக ஒரு உதவி மையம்


பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வுக்காக சென்னையில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் கூடுதலாக ஒரு உதவி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், கடந்த ஆண்டு 42ஆக இருந்த கலந்தாய்வு உதவி மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 43 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன் கூறியது: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வசதிக்காக, கடந்த ஆண்டைப் போலவே சென்னையில் மத்திய பாலிடெக்னிக் வளாகம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அதே நேரம், இந்த முறை கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துவதால், ஏராளமான மாணவர்கள் இயக்குநர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்கின்றனர். எனவே, மாணவர்களின் வசதிக்காக, தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்திலும் கூடுதலாக ஒரு உதவி மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 43 உதவி மையங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றார் அவர்.
உதவி மையங்களின் பட்டியல்:
சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி
கடலூர் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைஅறிவியல் கல்லூரி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல்
தொழில்நுட்பத் துறை வளாகம்
காஞ்சிபுரம் பச்சயப்பன் மகளிர் கல்லூரி
காஞ்சிபுரம் மாவட்டம் குரோம்பேட்டை ஐஆர்டி பாலிடெக்னிக் கல்லூரி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி
வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம்
விழுப்புரம் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
விழுப்புரம் திருக்கோவிலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
கோவை பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி
கோவை புது சித்தாபுதூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
கோவை தொழில்நுட்ப நிறுவனம் (சிஐடி)
தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி
ஈரோடு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி
ஈரோடு பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி
கிருஷ்ணகிரி பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி


நாமக்கல் என்.கே.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லூரி
நீலகிரி அரசு கலைக் கல்லூரி
சேலம் ஓமலூர் அரசு பொறியியல் கல்லூரி
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி
கரூர் தான்தோனிமலை அரசு கலைக் கல்லூரி
மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி
ராமநாதபுரம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி
தேனி போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி
திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரி
அரியலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி


நாகப்பட்டினம் வலிவளம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி
பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி
தஞ்சாவூர் ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
தஞ்சை செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி
திருச்சி துவாக்குடிமலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி
திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி
திருவாரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.சி. அரசு பொறியியல்
தொழில்நுட்ப கல்லூரி


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தென் திருவாங்கூர் இந்து கல்லூரி
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி
திருநெல்வேலி காந்தி நகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி
விருதுநகர் வி.வி.வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி
ஆகிய 42 உதவி மையங்கள் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 43 ஆவது உதவி மையமும் அமைக்கப்பட உள்ளது.