மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு விடைகள் விரைவில் வெளியீடு.!!


எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக என்.டி.ஏ. நடத்தும் நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இத்தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாளில் இடம்பெற்ற வினாக்களுக்கு என்.டி.ஏ. அதிகாரப்பூர்வமான விடைகளை விரைவில் வெளியிட இருக்கிறது.

மே 12ஆம் தேதியோ அதற்கு முன்போ விடைத்தாள் (Answer key) வெளியாக வாய்ப்பு உள்ளது. விடைத்தாள் வெளியானதும் அதில் ஏதேனும் தவறு இருந்தால், அதனை சரிசெய்ய விண்ணப்பிக்கலாம். திருத்தம் கோரும் ஒரு வினாவுக்கு 1000 ரூபாய் கட்டணம் பெறப்படும். இந்தக் கட்டணம் திரும்பப்பெறத்தக்கது அல்ல. விடைத்தாள் திருத்தப்பட்டால் புதிய விடைத்தாள் அடிப்படையில் மாணவர்களின் விடைத்தாள்கள் பதிப்பிடப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நீட் (NEET UG) தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன