ஜூன் 6 முதல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்!


மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள்ஜூன் 5ஆம் தேதிவெளியாக உள்ள நிலையில், ஜூன் 6ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும்மாணவர்கள் இணையதளம் மூலம்விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் MBBS படிப்பு மேற்கொள்ள உள்ள மாணவர்கள் www.tn.health.org எனும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.அதே போல்
www.tnmedicalselectiin.org என்ற இணையதளம் வாயிலாகவும்விண்ணப்பிக்கலாம்.வரும் ஜூன் 26 முதல் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும்என்றும் மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.