நபார்டு வங்கியில் வேலை - 87 காலிப்பணியிடங்கள்!


நேஷனல் பேங்க் ஃபார் அக்ரிகல்சர் அண்டு ரூரல் டெவலப்மெண்ட் (NABARD) எனப்படும் நபார்டு வங்கியில், கிரேடு ‘A’, கிரேடு ‘B’ போன்ற அதிகாரிப் பணியிடங்களுக்கு, 87 காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. மேனேஜர் (கிரேடு - ‘B’)
2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’)காலிப்பணியிடங்கள்:
1. மேனேஜர் (கிரேடு - ‘B’) - 08
2. அசிஸ்டெண்ட் மேனேஜர் (கிரேடு - ‘A’) - 79

மொத்தம் = 87 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 06.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்க வேண்டிய நாள்: 10.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26.05.2019

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கட்டணம் போன்று பல்வேறு தகவல்களை பெற, https://www.nabard.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.