Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 5, 2019

நீட் தேர்வின் விதிமுறைகள் வெளியீடு


நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்வர்களுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 நடைபெறவுள்ளது.

விதிமுறைகள்:

* தேர்வு நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 நடைபெறவுள்ளதால், தேர்வர்கள் பிற்பகல் 12 மணிக்கே தொடர்புடைய தேர்வு மையங்களுக்கு வந்து விட வேண்டும். பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மைய கேட் மூடப்படும், அதற்கு பின் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.



* ஜியோ மெட்ரிக்பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் அனுமதி இல்லை; தேர்வு எழுத பால் பாயிண்ட் பேனா தரப்படும்.

* மொபைல் போன், புளூடூத், பென்டிரைவ், கை கடிகாரம், கை கேமரா, காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கு அனுமதி இல்லை.

* மென்மையான நிறத்தில் ஆடை அணிய வேண்டும்; மாணவர்கள் அரைக்கை சட்டை அணிய அனுமதி; முழுக்கை சட்டைக்கூடாது.

* தேர்வு மையத்துக்குள் ஷூ அணியக்கூடாது, செருப்பு மட்டும் அணியலாம்; குதி உயர்ந்த செருப்புகளை அணியக் கூடாது.