கணினிமயமாகிறது, 'ஜி.எஸ்.டி., ரீபண்ட்'


சரக்கு மற்றும் சேவைகள் துறை சார்ந்த ஏற்றுமதியாளர்கள், தன்னிச்சையான கணினி நடைமுறையின் கீழ், 'ஜி.எஸ்.டி., ரீபண்ட்' பெறும் வசதி, ஜூன், 1 முதல் அமலுக்கு வரஉள்ளது.இது குறித்து, மத்திய வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜி.எஸ்.டி.,யில் பொருட்களை, 'சப்ளை' செய்வோர், இரு வழிகளில், 'ரீபண்ட்' பெறலாம்.முதலாவதாக, வங்கி உறுதி அளிப்பு ஆவணம் அல்லது கடன் பத்திரங்களை அளித்து, ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தாமல், ஏற்றுமதி செய்து, உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெறலாம்.


இரண்டாவது முறையில், ஏற்றுமதியாளர்கள் தாங்கள் அனுப்பும் சரக்கு அல்லது மேற்கொள்ளும் சேவைகளுக்கு முதலில், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தி,உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெறலாம்.கணினி மயம்இதில், இரண்டாவது வழிமுறையை பின்பற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு, உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெற, பலமாதங்கள் ஆகின்றன.
இதனால், அவர்கள் நடைமுறை மூலதனசிக்கலை சந்திக்கின்றனர். உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெறும் காலம் வரை, அவர்கள் வர்த்தகத்தை தொடர, கூடுதல் நிதி தேவைப்படுகிறது.இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக, ஏற்றுமதியாளர்கள், உள்ளீட்டு வரிப் பயனை திரும்பப் பெறும் நடைமுறை கணினிமயமாகிறது.

இதனால், செலுத்திய வரியை திரும்பப் பெற, பல மாதங்கள் காத்திருக்கும் நிலை மாறும்; சில நாட்களிலேயே பணத்தை திரும்பப் பெற முடியும்.தற்போது, ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தி, சரக்குகளை ஏற்றுமதி செய்வோருக்கு மட்டும் உள்ள இந்த வசதி, இனி சேவைகளை ஏற்றுமதி செய்வோருக்கும் கிடைக்கும்.
அது மட்டுமின்றி, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு சப்ளைசெய்வோரும், இந்த வசதி மூலம் விரைவாக உள்ளீட்டு வரிப் பயனைபெறலாம்.இந்த திட்டத்தில், ஜி.எஸ்.டி.என்., வலைதளத்துடன், சுங்கத் துறையும் இணைக்கப்பட்டுள்ளது.அதனால், ஏற்றுமதியாளரின் வங்கிக் கணக்கில், தன்னிச்சையாக திரும்பப் பெற வேண்டிய தொகை, வரவு வைக்கப்பட்டு விடும்.அதிகபட்சம், ஏற்றுமதி ஆவணங்களை சமர்ப்பித்த, இரு வாரங்களில், உள்ளீட்டு வரிப் பயனை, ஏற்றுமதியாளர்கள்பெறலாம்.


வரி அதிகாரிகளை சந்திக்காமல், ஜி.எஸ்.டி.என்., வலைதளம்வாயிலாகவே, பணம் திரும்பக் கிடைக்கும்.எனினும், பொருட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு, சரக்கு அனுப்புவோரும், செலுத்திய வரியை திரும்பப் பெற, ஜி.எஸ்.டி.என்., வலைதளத்தில், 'GST RFD-01A' படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.முடிவுஅத்துடன், அந்த படிவத்தின் காகித ஆவணத்துடன், இதர ஆவணங்களை இணைத்து, வட்டாரவரி அதிகாரியிடம்அளிக்க வேண்டும்.புதிய திட்டம், தன்னிச்சையாக நடைபெறும் என்பதால், போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் மோசடிகளுக்கும் முடிவு கட்டபடும். இவ்வாறு, அவர்கூறினார்.


ஜி.எஸ்.டி.என்., வலைதளம், ரிசர்வ் வங்கி, 'சர்வர்' உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. செலுத்திய வரியை திரும்பப் பெறும் நடைமுறை, முழுவதும் கணினி மயமாவதால், ஏற்றுமதியாளரின் சரக்குவிபரங்கள், விலைப் பட்டியல், செலுத்தியவரி உள்ளிட்ட விபரங்கள் அனைத்தையும்,சுலபமாக கண்காணிக்க முடியும்.ரஜத் மோகன்ஏ.எம்.ஆர்.ஜி., அண்டு அசோசியேட்ஸ் பார்ட்னர்