Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 2, 2019

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மறுகூட்டலுக்கு மாணவர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து வியாழக்கிழமை பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மே 6-ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மறுகூட்டலுக்கு...: தேர்வர்கள், எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 2-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மே 4-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.45 மணி வரை பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?: மறுகூட்டலுக்கு மொழிப்பாடத்துக்கு (பகுதி 1)- ரூ.305, ஆங்கிலப் பாடத்துக்கு (பகுதி- 2)- ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205, விருப்ப மொழிப் பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்களது தேர்வு மையங்களிலும் பணமாகச் செலுத்த வேண்டும். அப்போது கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.