துணை ராணுவத்தில் அசிஸ்டென்ட் கமாண்டென்ட் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு


இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படையான BSF, CRPF, CISF, ITBP, SSB-ல் நிரப்பப்பட உள்ள 323 அசிஸ்டென்ட் கமாண்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 323பணி: Assistant Commandants

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தனித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வானது தாள் - I, தாள் - II என இரு தாள்கள் கொண்டது.எழுத்துத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.08.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதன ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட்ட எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துக் கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2019