நாளுக்கு நாள் சின்னதாகும் நிலவு.. பயங்கர நில நடுக்கமும் ஏற்படுகிறது.. நாசா வெளியிட்ட ஷாக் தகவல்


வாஷிங்டன்: நாம் ஆசை ஆசையாய் பார்த்து வர்ணித்த, கவிதை தீட்டிய நிலவு சுருங்க ஆரம்பித்துவிட்டது என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். ஆனால், அது உண்மைதான் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.நிலவை காதலியின் முகத்தோடு ஒப்பிட்டு கவிதை புனைந்தனர் நமது கவிஞர்கள். ஆனால் காதலிக்கும் வயதானால் முகத்தில் சுருக்கங்கள் வரும். அப்படித்தான், நிலவிற்கும் இப்போது சுருக்கங்கள் வந்துவிட்டனவாம்.
இந்த சுருக்கங்களுக்கு காரணம், நிலவு சிறிதாகிக்கொண்டே போவதுதானாம். நிலவு மெலிவதால், அதன் மேற்பரப்பு உடைந்து, பாறை முறிவுகள் ஏற்பட்டு, அவை கோடுகளாக உருமாறி தென்பட ஆரம்பித்துள்ளது. இவை ஒன்றோடொன்று மோதும் தன்மை கொண்டவை என்பது அச்சுறுத்தும் தகவலாகும். கடந்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் நிலவு 150 அடி அளவுக்கு சுருங்கியுள்ளதாம்.
குட்டி நிலவு நிலவில் சுருக்கம்இப்படி நிலவு சுருங்கிக் கொண்டே செல்ல காரணம் என்ன என்பதையும் நாசா விளக்கியுள்ளது. நிலவின் உட்பகுதி குளிர்ச்சையடைவதுதான், இந்த நிலைமைக்கு காரணமாம். குளிர்ச்சியடையும் பொருள் சுருங்கும் என்பது இயற்பியல் விதி என்பது அனைவரும் அறிந்ததுதான்.
நிலவு நிலை
நிலவு அதிர்வு
விண்ணியல் ஆய்வாளர்கள் கடந்த கால ஆய்வு திட்டங்களின்போது, நிலவில் சீசோமீட்டர்களை பொருத்தினர். அதில், நிலவில் நிலநடுக்கம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இதை moonquake என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இந்த நிலநடுக்கம், நிலவின் சுருக்கத்தால் ஏற்பட்டுள்ள கோடுகளை ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு அதிர வைக்கும் வலிமை கொண்டவை என்கிறது நாசா.நில அதிர்வு
விஞ்ஞானிகள் உறுதி
விஞ்ஞானி தாம் வாட்டர்ஸ் கூறுகையில், "நிலவு தொடர்ச்சியாக குளிர்ச்சையடைவதாலும், சுருங்குவதாலும் நிலவில் அதிர்வு ஏற்படும் என்பதை நாங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளதோம். இந்த விஷயத்தில் இந்த ஆய்வுதான், முதல் ஆதாரம்" என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.அதிகப்படியான நில அதிர்வு
ரிக்டர் அளவு
நிலவில் ஏற்படும் நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவுக்கு வலிமையானதாக இருக்கும் என கணித்துள்ளனர் விஞ்ஞானிகள். மேலும், நிலவு சுருங்குவது தொடர்பாக ஒரு வீடியோவை ட்விட்டரில் நாசா ஷேர் செய்துள்ளது. சமீபத்தில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளையை புகைப்பட ஆதாரமாக வெளியிட்டு ஆச்சரியத்தில் மூழ்கடித்த நாசா அமைப்பின் அடுத்த முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக இது பார்க்கப்படுகிறது.


You've heard of earthquakes. But what about moonquakes? Like a wrinkled grape drying out to a raisin, the Moon is shrinking as its interior cools causing wrinkles or faults to form on its brittle surface. When enough stress builds, it releases the quakes: https://go.nasa.gov/2Q4lP0X