பள்ளிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 10ம் வகுப்பு மாணவர்களின் சுய விவரப்பட்டியலை சரிப்பார்த்து மே 9ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியதையடுத்து, மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளைஅரசுத் தேர்வுகள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர், பயிற்று மொழி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் கோரி தொடர்ந்து விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளதால் அரசு தேர்வுகள் இயக்ககம் இறுதி வாய்ப்பை வழங்கியுள்ளது.


அதன்படி,10ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர், பயிற்று மொழி, புகைப்படம், பள்ளி பெயர் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து மே9ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் முதன்மைகல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத்தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.