காலி பணியிடங்களை நிரப்ப கிராம உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் நிரப்பிட வேண்டுமென மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மலைக்கோட்டை டவுன்ஹால் பகுதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் காண்டீபன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்லதுரை முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான (டி பிரிவு) ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். முதற்கட்டமாக குறைந்தபட்சம் 10 முதல் 20 ஆண்டுகள் பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு உடனடியாக நான்காம் நிலை ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். கல்வி தகுதி உள்ள கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவி உயர்வு இந்த ஆண்டுக்கான பதவி உயர்வு, தொகுப்பு பட்டியலை உடனடியாக அமல்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.