ஸ்மார்ட்போனில் ஓட்டுனர் உரிமம் டவுன்லோடு செய்வது எப்படி?


இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது முறையான ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன சான்றுகளை கையில் வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். இந்திய அரசாங்கத்தின் போக்குவரத்து துறை சார்பில் புதிய செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எம்பரிவாஹன் என அழைக்கப்படும் இந்த செயலி கொண்டு ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசன்ஸ்) மற்றும் ஆர்.சி. புத்தகத்தை டிஜிட்டல் முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். இந்திய சாலைகளில் பயணிக்கும் போது போக்குவரத்து காவல் துறை உங்களை நிறுத்தி வாகனத்தை சோதனையிடும் போது விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்கலாம்.


குறிப்பாக ஓட்டுனர் உரிமத்தின் நகல் கையில் இல்லாத சமயத்தில் இது பேருதவியாக இருக்கும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். ஸ்மார்ட்போன்களில் எம்பரிவாஹன் செயலி மூலம் விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை உருவாக்குவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம். விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை டவுன்லோடு செய்ய உங்களிடம் ஓட்டுனர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்த விவரங்கள் இன்றி விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை எம்பரிவாஹன் செயலியில் டவுன்லோடு செய்ய முடியாது.கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்

 கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எம்பரிவாஹன் செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்

- செயலியை திறந்து சைன்-இன் செய்ய வேண்டும். அக்கவுண்ட் இல்லாத சமயத்தில் சைன்-அப் செய்ய வேண்டும்

- வலதுபுறத்தில் இருக்கும் ஓட்டுனர் உரிமத்துக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

- இனி ஓட்டுனர் உரிம எண்ணை பதிவிட வேண்டும்

- விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தை பெற Add To My Dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- பிறந்த தேதியை பதிவிட்டு வெரிஃபிகேஷனை நிறைவு செய்ய வேண்டும் - இனி பேக் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்- டேஷ்போர்டு சென்று DL Dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

- இனி உங்களது ஓட்டுனர் உரிமத்தை எம்பரிவாஹன் செயலியில் இயக்க முடியும்

- இதுதவிர 3டி பார்கோடு உருவாக்கிக் கொள்ளலாம். இதனை காவல் துறையினர் ஸ்கேன் செய்தால் உங்களது ஓட்டுனர் உரிமத்தை பார்க்க முடியும்.

- எம்பரிவாஹன் செயலியில் இருக்கும் விர்ச்சுவல் ஓட்டுனர் உரிமத்தில் உங்களது பிறந்த தேதி, காலவதி தேதி, வாகன விவரம் மற்றும் ஆர்.டி.ஓ. விவரம் என அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். டிஜிட்டல் கையொப்பம் கொண்டிருக்கும் படிவம் ஐ.டி. சட்டம் 2000 பிரிவின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அடையாள சான்றுகளை கொண்டு செல்ல மறக்கும் பட்சத்தில் விர்ச்சுவல் தரவுகளை காண்பிக்கலாம்.