ஆசிரியர் தகுதித் தேர்வு: "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக "டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு முடிந்து, வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்தநிலையில் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் www.trb.tn.
nic.in என்ற இணையதள முகவரியில், நுழைவுச் சீட்டுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வு: "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு Hall Ticket Click Download