தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுமா?- கல்வித் துறை இயக்குநர்களுடன் கட்டணக்குழு ஆலோசனை

தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ உட்பட 17 ஆயிரத்துக்கும் அதிகமானதனி யார் பள்ளிகள் இயங்கி வருகின் றன. இதற்கிடையே அனைத்துவித தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க உயர் நீதிமன்ற உத்தரவின்படி கல்வி கட்டணக்குழு அமைக்கப்பட் டுள்ளது. இப்போது நீதிபதி மாசிலாமணி தலைமையிலான குழுசெயல்பாட்டில் உள்ளது. இந்தக் குழு தனியார்பள்ளி களில் உள்ள கட்டமைப்பு வசதி கள் அடிப்படையில் கல்வி கட்ட ணத்தை நிர்ணயித்துவருகிறது.அதன்படி தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளுக்கு கட்ட ணம் நிர்ணயம் செய்யும் பணி களில் கட்டணக் குழு ஈடுபட்டுள் ளது.நடப்பு ஆண்டு கல்விக் கட்டண நிர்ணய அனுமதிக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 2-ம் தேதி தொடங்கியது. அதிகாரப்பூர்வமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படாத தனியார் பள்ளிகள் tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கல்விக் கட்டணக்குழு தெரிவித்துள்ளது.இந்நிலையில் தனியார் பள்ளி களுக்கான கட்டண நிர்ணயம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்டணக் குழு தலைவர் மாசிலாமணி, கல்வித் துறை இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கட்டணம் நிர்ணயிக் கப்படாத பள்ளிகளின் நிலவரம், கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீதான புகார்கள் குறித்து விவா திக்கப்பட்டன. மேலும், கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன. அதையேற்று கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்த பரிசீலனைகளும் நடைபெற்றதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.