தாய்க்கு அடுத்து தாய்மை உணர்வு என்பது ஆசிரியர்களிடத்தில்தான் இருக்கிறது கல்வியாளர்கள் சங்கமம் விழாவில் குமுதம்சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி பேச்சு...


கல்வியாளர்கள் சங்கமம் கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா என்னும் தலைப்பில் *இதனால் சகலமானவர்களுக்கும்* விழாவில் கலந்துகொண்டு பெண்ணியம் சில கேள்விகளும்,பதில்களும் என்னும் தலைப்பில் பேசிய குமுதம்சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி ராமச்சந்திரன் விடுமுறை தினங்களில் கூட சமூக மாற்றத்திற்காக மூன்று நாட்களை ஒதுக்கி ஒன்றுசேர முடியுமென்றால் அது ஆசிரியர்களால்தான் முடியும். அதனைக் கல்வியாளர்கள் சங்கமம் சாதித்து இருக்கின்றது. இப்படிப்பட்ட ஆசிரியர் சங்கமங்கள்தான் நம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் எனக் குறிப்பிட்டார்.


தனது குழந்தைகளுக்கு எதனையெல்லாம் சொல்லிக் கொடுப்போமோ, எதனையெல்லாம் தவிர்ப்போமோ அதனை எல்லாம் நம்மிடம் பயில வரும் குழந்தைகளிடமும் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார் திருமதி லோகநாயகி.
ஒரு பெண்ணாக சமூகத்தில் உயர்வான இடத்தை அடைவதற்கு சிரமப்படத்தான் வேண்டியிருக்கும். ஆனால் கண்டிப்பாக பெண்களால் சாதிக்க முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டியதில்லை. ஓர் ஆசிரியரால் ஒரு வகுப்பறையை மாற்ற முடியுமென்றால், இந்த கல்வியாளர்கள் சங்கமத்தால் இந்த சமூகத்திற்கு தேவையான மாற்றங்களையும் முன்னெடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
விழாவில் 30 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்ததோடு, பெண் ஆசிரியர்களோடு கலந்துரையாடல் நிகழ்விலும் பங்கேற்றுச் சிறப்பித்தார்.