சித்தா மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு உண்டா இல்லையா??

சித்தா மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு காலம் கடத்துவதால் இந்த படிப்புகளில் இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். போன்ற அலோபதி மருத்துவ மாணவர் சேர்க்கை 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடக்கிறது.அதேபோல சித்தா, யோகா, ஆயுர்வேதா, ஓமியோபதி, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் 2018 - 19ம் கல்வியாண்டு முதல் நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது.


இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.மாணவர் சேர்க்கைஇதற்கிடையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1970ல் 'பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கை நடத்தலாம்' என கூறப்பட்டுள்ளது.இந்த சட்டத்தின்படி கடந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடந்தது. காலதாமதமான அறிவிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை குறைவு காரணமாக அரசு மற்றும் தனியார் கல்லுாரி களில் 40 சதவீத மருத்துவ இடங்கள் காலியாகஇருந்தன. இந்நிலையில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் 'இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை.


ஆனால் சித்தா ஹோமியோபதி ஆயுர்வேதா யுனானி படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மொத்தமுள்ள 393 இடங்களில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ படிப்பில் 60 இடங்கள் உள்ளன.மீதமுள்ள 333இடங்களுக்கு நீட் தேர்வு என பிப்ரவரி மாதமேமத்திய அரசு அறிவித்து உள்ளது.காலதாமதம்இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வில் தமிழகத்தில் 1.34 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் பெரும்பாலானோர் அலோபதி மருத்துவம் படிக்க நீட் தேர்வுஎழுதியுள்ளனர். சித்தா படிக்க விரும்பும் மாணவர்களுக்குநீட் உண்டா இல்லையா என்பது தெரியாததால் பலர் விண்ணப்பிக்கவில்லை.

தொடரும் குழப்பங்களுக்கு தமிழக அரசு பதிலளிக்காமல் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி காலதாமதத்தை ஏற்படுத்தி வருகிறது.தமிழக சுகாதாரத் துறை செயலர் பீயூலா ராஜேஷ் கூறுகையில் ''சித்தா மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு உண்டா இல்லையா என்பது அரசின் கொள்கை தொடர்பானது.''தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அது பற்றி கூற முடியாது'' என்றார்.