"பி.சி.ஏ., படிப்பு, பி.எஸ்.சி.,க்கு இணையான தகுதி அல்ல"


சென்னை: பி.சி.ஏ., இளங்கலை பட்டப்படிப்பு, பி.எஸ்.சி., படிப்புக்கு இணையான தகுதி அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.சி.ஏ., இளங்கலை பட்டப்படிப்பு, பி.எஸ்.சி., படிப்புக்கு இணையான தகுதி அல்ல என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் அரசு வேலைக்காக, குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளின் தகுதி தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பி.சி.ஏ., இளங்கலை பட்டமானது, பி.எஸ்.சி., கணிதத்திற்கு சமமானது அல்ல என்பதால் அதற்கு இணையான வேலைவாய்ப்பை கோரமுடியாது.


அதேபோல் பாரதியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைகழகம், சேலம் பெரியார் பல்கலை கழகம், மதுரை காமராசர் பல்கலைகழகம் ஆகியவை வழங்கும் எம்.எஸ்.சி.,எஸ்சி நுண்ணுயிரியல் பட்டங்கள் எம்.எஸ்.சி., விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல. எனவே, எம்.எஸ்.சி., விலங்கியல் பட்டத்துக்கான வேலைவாய்ப்பை எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம்பெற்றவர்கள் கோர முடியாது.


இதுபோல் 50-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை, சமமான படிப்புகளாக கொண்டு அரசு வேலைக்கு கோரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஏற்கெனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் இணையானவை இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.