தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி!


சென்னை ஐசிஎப்-ல் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோருக்கு மட்டும் தொழில் பழகுநர் பணி (அப்பரண்டிஸ்)-க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட இந்தியர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பது குற்றச்சாட்டு.


இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றன. மேலும் தமிழக வேலை தமிழருக்கு என்கிற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கும் ஆனது. இந்நிலையில் சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்., ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அப்பரண்டிஸ்களை சேர்ப்பது தொடர்பான அறிவிப்பில், தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.