அண்ணா பல்கலை தேர்வு மறுமதிப்பீட்டில் புதிய மாற்றம்?


அண்ணா பல்கலைக்கழக தேர்வு மறுமதிப்பீடு திட்டத்தில் தற்போது உள்ள நடைமுறையினை மாற்றம் செய்து புதிய திட்டத்தை கொண்டுவரவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-அண்ணா பல்கலைக் கழகத்தில் கீழ் நடைபெறும் தேர்வில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவரும், விடைத்தாள் திருத்திய ஆசிரியரும் நேருக்கு நேர் விவாதித்து புதிய மதிப்பெண் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 8-வது பருவத் தேர்வில் மாணவர்கள் எழுதும் 2 தேர்வுகளில், ஒரு தேர்வில் தோல்வியடைந்தால், ஒரே மாதத்தில் உடனடியாக தேர்வை எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.