நீட் தேர்வு... இந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!


சென்னை: நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழகம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது.நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு

தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் 88% பேர் தேர்வு எழுதினார்கள். நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு நேற்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
வினாத்தாள் எளிமைஇந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்து அதிகளவு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான வினாத்தாள் எளிமையாக இருந்ததாக வல்லுநர்களும் மாணவ, மாணவிகளும தெரிவித்தனர்.
பெரும்பாலான கேள்விகள்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி செயலாளர் டாக்டர் பிரசாத் மன்னி நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுகுறித்து முன்கூட்டிய விழிப்புணர்வு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இயற்பியல் மட்டுமேஇதனிடையே தேர்வு எழுதிய மாணவ மாணவிகளும் எதிர்பார்த்ததை போன்று நீட் தேர்வு அவ்வளவு கடினமாக இல்லை என்று தெரிவித்தனர். மேலும் மூன்று பாடங்களில், உயிரியல் எளிதாக இருந்தது, வேதியியல் மிதமாக இருந்தது மற்றும் இயற்பியல் மட்டுமே சற்று கடினமாக இருந்தது என்றும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
நல்ல ரிசல்ட்

வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிகளவு மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வில் கடந்த ஆண்டு தமிழகம் 34% தேர்ச்சியை மட்டுமே கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.