மெய்யீற்றுப் புணர்ச்சி - TNPSC, TET, TRB, NET, SET, VAO, GROUP 1-8 STUDY MATERIALS
WATCH VIDET AND CLICK DOWNLOAD


மெய்யீற்றுப் புணர்ச்சி 

இரண்டு சொற்கள் இணையும்போது, நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய் எழுத்தாக அமைந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிர் அல்லது மெய் இவற்றில் ஏதேனும் ஒன்று வந்து இணைவது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.

இம்மெய்யீற்றுப் புணர்ச்சி,

மெய் + உயிர்
மெய் + மெய்
என்ற வாய்வாட்டில் அமையும்.

மெய்+உயிர் புணர்ச்சி

நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யாகவும் வருமொழியின் முதல் எழுத்து உயிராகவும் அமைந்த சொற்கள் இணைவது மெய் + உயிர்ப் புணர்ச்சி எனப்படும்.

எ.கா. மரம் + அழகு

என்ற சொற்களைச் சான்றாகக் கொள்ளலாம்.

இவ்விரு சொற்களில் மரம் என்ற சொல்லின் ஈற்றில் ம் என்ற மெய்யும் அழகு என்ற சொல்லில் முதலில் அ என்ற உயிரும் வந்துள்ளதைக் காணலாம்.

இவ்வாறு நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யாகவும் வருமொழியின் முதல் எழுத்து உயிராகவும் அமைந்த சொற்கள் இணைவது மெய்+உயிர்ப் புணர்ச்சி எனப்படும்.

உடல்மேல் உயிர் வந்து இணைவது இயல்பு

மெய்+உயிர்ப் புணர்ச்சியில், நிலைமொழி ஈற்று மெய்யும் வருமொழி முதல் உயிரும் இணைந்து உயிமெய்யாகி ஒலிக்கும்.

எ.கா.,

மரம்+அழகு = மரமழகு

இவற்றையே உடல்மெல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பென்றார் நன்னூலார்.

மெய்+மெய் புணர்ச்சி

நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் மெய்யாக அமைந்த இரண்டு சொற்கள் இணைவது மெய் + மெய் புணர்ச்சி எனப்படும்.

எ.கா. கந்தன்+வந்தான்

என்ற சொற்களைச் சான்றாகக் கொள்ளலாம்.

இவ்விரு சொற்களில் கந்தன் என்ற சொல்லின் ஈற்றில் ன் என்ற மெய்யும் வந்தான் (வ்+அந்தான்) என்ற சொல்லில் முதலில் வ் என்ற மெய்யும் வந்துள்ளதைக் காணலாம்.

இவ்வாறு நிலைமொழியின் ஈற்றிலும் வருமொழியின் முதலிலும் மெய் எழுத்து வந்து சொற்கள் இணைவது மெய்+மெய் புணர்ச்சி எனப்படும்.

மேற்கூறப்பட்ட மெய்+உயிர், மெய்+மெய் என்ற இருவகைப் புணர்ச்சியும் மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.