ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

கடந்த ஜனவரி 6ஆம் தேதி மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ஆதார் எண் – ஓட்டுநர் உரிமம் இணைப்பை விரைவில் கட்டாயமாக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் கார்டு எண்ணை இணைப்பதால் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் வைத்திருப்பதைத் தடுக்க முடியும். இந்த இணைப்பால் தனிநபரைப் பற்றிய அனைத்து விவரங்களும் ஓட்டுநர் உரிமத்துடன் இணைவதால், போலியாக இன்னொரு ஓட்டுநர் உரிமம் பெற முயல்வதைத் தடுத்துவிடலாம் என அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே கூடிய விரைவில் ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது நல்லது. அதை ஆன்லைனில் எளிமையாக எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம். மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சாலைப் போக்குவரத்துறை இணையதளம் மூலம் இந்த இணைப்பை செய்யப்படுவதால், ஒவ்வொரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் நடைமுறையில் சிறிய மாற்றம் இருக்கலாம். பொதுவான வழிமுறை பின்வருமாறு…தேவையானவை:
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
ஆதார், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் விவரங்களைத் தயாராக வைத்திருப்பதுடன் வேகமான இன்டர்நெட் வசதியும் வேண்டும்.
இணைக்கும் வழிமுறை
(1) மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் சாலை போக்குவரத்து துறையின் இணையதளத்துக்குச் செல்லவும்.
(2) அதில், “Link Aadhaar” என்ற தெரிவை கிளிக் செய்யவும்.
(3) பின், “Driving License” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
(4) புதிதாகத் தோன்றும் பக்கத்தில் ஓட்டுநர் உரிமம் எண்ணை டைப் செய்து “Get Details” என்பதைக் கிளிக் செய்யவும்.
(5) முன்னர் டைப் செய்த எண் கொண்ட ஒட்டுநர் உரிமத்தின் விவரங்கள் தோன்றும்.


(6) இப்போது திரையில் 12 இலக்க ஆதார் எண்ணை அதற்கான இடத்தில் டைப் செய்யலாம்.
(7) ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணையும் டைப் செய்யவும்.
(8) பின், Submit என்பதை கிளிக் செய்யவும்.
(9) ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் வந்துவிடும்.
(10) இறுதியாக, OTP எண்ணை அதற்கான இடத்தில் டைப் செய்து Submit செய்தால்போதும்.குறிப்பு: அனைத்து தனிநபர் விவரங்களையும் முன்கூட்டியே சரிபார்க்கவும். ஏதேனும் தவறு இருந்தால் அதனைச் சரிசெய்துவிட்டு, டிரைவிங் லைசென்ஸ் – ஆதார் இணைப்பைத் தொடங்கவும்