Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 10, 2019

வரலாற்றில் இன்று 10.07.2019

சூலை 10 (July 10) கிரிகோரியன் ஆண்டின் 191 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 192 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 174 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

988 – டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது.
1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது.
1460 – வோர்விக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தான்.
1553 – லேடி ஜேன் கிறே இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
1778 – அமெரிக்கப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி பிரித்தானியா மீது போரை அறிவித்தான்.
1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.
1800 – உருது, இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை ஊக்கப்படுத்தவென கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி: தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படையினர் கொல்லப்பட்டனர்.


1890 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
1909 – ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1925 – சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
1925 – இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவாரின் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1951 – கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1956 – இலங்கை, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
1958 – அலாஸ்காவில் மிகப் பெரும் சுனாமி அலை (524 மீட்டர் உயரம்) பதியப்பட்டது.
1962 – உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.
1973 – வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
1973 – பஹாமாஸ் பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.


1978 – மௌரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.
1991 – தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட வாரியத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
1991 – யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.
1992 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.
2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.

பிறப்புகள்

1925 – மகத்திர் மொகமட், மலேசியப் பிரதமர்.
1944 – கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர் (இ. 2014)
1949 – சுனில் கவாஸ்கர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்



1990 – காந்தரூபன், விடுதலைப் புலிகளின் கரும்புலிகளில் ஒருவர் (பி. 1971)
2000 – நாவேந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)
2014 – சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1912)

சிறப்பு நாள்

பஹாமாஸ் – விடுதலை நாள் (1973)
அமைதி நாள்