Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, July 19, 2019

வரலாற்றில் இன்று 19.07.2019

சூலை 19 (July 19) கிரிகோரியன் ஆண்டின் 200 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 201 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 165 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1545 – இங்கிலாந்தின் “மேரி றோஸ்” என்ற போர்க்கப்பல் போர்ட்ஸ்மவுத்” என்ற இடத்தில் மூழ்கியதில் 35 பேர் மட்டும் தப்பினர்.
1553 – 9 நாட்களே இங்கிலாந்தின் அரசியாக இருந்த ஜேன் கிறே பதவியிழந்தாள். முதலாம் மேரி அரசியாக முடி சூடினாள்.
1870 – பிரான்ஸ் புரூசியா மீது போரை ஆரம்பித்தது.
1900 – பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று.
1912 – அரிசோனா மாநிலத்தில் 190 கிகி எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்து கிட்டத்தட்ட 16,000 துகள்களாகச் சிதறுண்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – பர்மிய தேசியவாதியான ஓங் சான் மற்றும் அவரது 6 அமைச்சர்கள் கொல்லப்பட்டனர்.


1967 – வட கரோலினாவில் போயிங் 727 மற்றும் செஸ்னா 310 விமானங்கள் நடுவானில் மோதியதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
1980 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மொஸ்கோவில் ஆரம்பமாயின.
1985 – இத்தாலியில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 268 பேர் கொல்லப்பட்டனர்.
1996 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.
1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவில் இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் படகு விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. ஏழு கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

பிறப்புகள்

1827 – மங்கள் பாண்டே, சிப்பாய்க் கிளர்ச்சியை ஆரம்பித்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய் (இ. 1857)
1893 – விளாடிமீர் மயகோவ்ஸ்கி, ரஷ்யக் கவிஞர் (இ. 1930)
1938 – ஜெயந்த் விஷ்ணு நர்லிகர், இந்திய அறிவியலாளர்
1979 – தில்லார பர்னான்டோ, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப் பநது வீச்சாளர்
1979 – மாளவிகா, தமிழ்த் திரைப்பட நடிகை



இறப்புகள்

1947 – சுவாமி விபுலாநந்தர், தமிழிசை ஆய்வாளர் (பி. 1892)
1947 – ஓங் சான், பர்மிய தேசியவாதி (பி. 1915)
1987 – ஆதவன், தமிழ் சிறுகதை எழுத்தாளர் (பி. 1942)
2013 – சைமன் பிமேந்தா, கர்தினால் (பி. 1920)

சிறப்பு நாள்

மியான்மார் – பர்மிய மாவீரர் நாள்
நிக்கரகுவா – தேசிய விடுதலை நாள் (1979)