Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 11, 2019

2.98 லட்சம் காலி பணியிடங்கள்


ரயில்வேயில் 2.98 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளதாகவும், அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது:


கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் 4.61 லட்சம் ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 1991ம் ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கை 16,52,985. 2019ம் ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கை 12,48,101 ஆக உள்ளது.
இதன் மூலமாக ரயில்வே சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த மாதம் 1ம் தேதியின்படி, ஏ, பி, சி, மற்றும் டி பிரிவுகளில் 2,98,754 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலமாக ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 2,94,420 ஊழியர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


2018-2019ம் ஆண்டு 2,94,420 இடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கியது. 1,51,843 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது.
2019-2020ம் ஆண்டில் 1,42,577 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெறும். துறையின் உற்பத்தி மற்றும் சேவையின் தரமானது தொழிலாளர்கள் சக்தியை மட்டும் சார்ந்து அல்ல.
தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தானியங்கி இயந்திரங்களின் பயன்பாட்டை விரிவாக்குதையும் சார்ந்திருக்கிறது. எனவே ஊழியர்களின் எண்ணிக்கையை வைத்து சேவையின் தரத்தை நிர்ணயிப்பது என்பது தவறாகும். இவ்வாறு அவர் கூறினார்