Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 9, 2019

இன்ஸ்சூரன்ஸ் சான்றிதழ் இல்லாத வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பறிமுதல் செய்து ஏலம் விட அரசு உத்தரவு

சேலம்: தமிழகத்தில் இன்சூரன்ஸ் இல்லாமல் இயக்கி விபத்தில் சிக்கும் வாகனங்களை, போலீசார், போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன், ஏலம் விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், இயக்கத்தில் உள்ள, 2.50 கோடி வாகனங்களில், இன்சூரன்ஸ் (காப்பீடு) செய்யாமல் இயக்கப்படும் வாகனங்கள் மீது போக்குவரத்து துறை, போலீசார் அபராதம் விதித்தும், அவற்றை பறிமுதல் செய்தும், தங்களின் அலுவலகங்கள் நிறுத்துவர். பின்னர் அந்த வாகன உரிமையாளர்கள், இன்சூரன்ஸ் தொகையை செலுத்தி, காப்பீட்டை உறுதி செய்ததற்கான அத்தாட்சி கடிதம் வழங்கினால், வாகனங்கள் விடுவிக்கப்படுவது வழக்கத்தில் இருந்து வந்தது.

காப்பீட்டுத் தொகை செலுத்தாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மாற்றங்களை செய்து, கடந்த, ஜூன், 19ல், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த உத்தரவை மேற் கொள் காட்டி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை விபரம்: தமிழ்நாடு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு நீதிமன்ற விதிகள், 1989ல் வழங்கப்பட்டுள்ள அரசாணையின் படி விபத்து இழப்பீடு பெறுவது குறித்து சில திருத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.