ஐ.ஐ.டி.,யில் டெக் - எம்.பி.ஏ., படிப்பு அறிமுகம்

சென்னை: உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யில், நடப்பு கல்வி ஆண்டில், டெக் - எம்.பி.ஏ., என்ற படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டுக்கு பின், பி.டெக்., மற்றும் எம்.பி.ஏ., என, இரண்டு வகை பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்து, ஐ.ஐ.டி.,யில் சேரும் மாணவர்களுக்கு, ஐந்தாண்டுகள், இந்த படிப்பு நடத்தப்படுகிறது.நவீன தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்ப வணிகம் உள்ளிட்டவை குறித்த மேலாண்மை பாடங்கள், இந்த படிப்பில் கற்று தரப்படும். நவீன கணினி தொழில்நுட்ப காலத்துக்கு, இந்தப் படிப்பு, மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு பெரும் உதவியாக இருக்கும் என, சென்னை, ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.