சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள்


சூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன், சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு கலை உலகிலிருந்து சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.