Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 10, 2019

எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா? அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...!


ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். நமது உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காத போது அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
இதே பிரச்சினைதான் அதிகளவு தண்ணீர் குடிக்கும்போதும். எனவே அளவான தண்ணீர் குடிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலருக்கு எப்பொழுதும் அதிக தாகம் இருந்து கொண்டே இருக்கும். அப்போதுதான் தண்ணீர் குடித்திருந்தாலும் அடுத்த நிமிடமே அவர்களுக்கு தாகம் எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் நமது சில அலட்சியான தினசரி பழக்கவழக்கங்களும், நோய்களும்தான். இந்த பதிவில் தண்ணீர் குடித்த பிறகும் தாகமெடுக்க காரணம் என்னவென்று பார்க்கலாம்.
எப்போது தண்ணீர் குடிக்கலாம்? சீரான இடைவெளிகளுக்கு இடையில் தண்ணீர் குடிப்பது நல்ல விஷயம். மேலும் கடுமையான உடற்பயிற்சி, காரமான உணவுகள் சாப்பிட்ட பிறகு, சோர்வான நேரங்கள், காலை எழுந்தவுடன் போன்ற சமயங்களில் தண்ணீர் குடிப்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் எப்போதும் தாகமாக இருந்தால் உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது.  சில பொதுவான காரணங்கள் தினமும் அதிக காரம் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவுகள் சாப்பிடுவது உங்களுக்கு அதிக தாகம் எடுப்பதற்கான காரணம் ஆகும். மேலும் வியர்வை, சோர்வு, தூக்கமின்மை அதிக உடற்பயிற்சி போன்றவை கூட உங்களுக்கு அதிக தீரா தாகத்திற்கான காரணமாக இருக்கலாம்.


வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டுமே உங்கள் உடலில் அதிகளவு நீர் இழப்பை ஏற்படுத்தும். இந்த நோய்கள் உங்கள் உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் நீரிழப்பு, மயக்கம், சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வயிற்றுப்போக்கு ஏற்படும் போது உப்பு அல்லது சர்க்கரை கலந்த நீரை குடிப்பது எலக்ட்ரோலைட் சமநிலையை பாதுகாக்கும்.
அதிகளவு கார்போஹைட்ரேட் நீங்கள் அதிக பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் அதிக கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களின் அதீத தாகத்திற்கு காரணமாக அமைகிறது. கொழுப்பு மற்றும் புரோட்டினை விட கார்போஹைட்ரேட் அதிகளவு தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும். இதனால் நீங்கள் அதிகளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். மேலும் இது உங்களை தொடர்ந்து தாகமாக வைத்திருக்கும்.

அதிக இரத்த இழப்பு உங்கள் உடலில் இருந்து அதிக இரத்தம் வெளியேறும்போது அது உங்கள் உடலில் நீரின் அளவை குறைத்து உங்களை தாகமாக உணரச்செய்யும். பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், அதிகளவு அல்சர் தாக்குதல் இருக்கும்போதும் இந்த பிரச்சினை ஏற்படும். மாதவிடாய் காலம் பொதுவாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஸ்ட்ரோஜன் அளவை மாற்றியமைப்பதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.
தைராய்டு மற்றும் சர்க்கரை நோய் சர்க்கரை நோய் மற்றும் தைராய்டின் முதன்மையான அறிகுறிகளில் ஒன்று அதிக தாகமாகும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகாரிக்கும் போது அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வார்கள் அதற்கு காரணம் போதுமான ஹார்மோன் சுரப்பு இல்லாததுதான். து. நீரிழிவு நோயாளிகளைப் போலவே ஹைப்போ தைராய்டு உள்ளவர்களும் தாகத்தைத் தூண்டும் ஆரோக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.