மாணவர்களை ஷூ, சாக்ஸ் அணிய கட்டாயப்படுத்தக்கூடாது


மழைக்காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் ஷூ, சாக்ஸ் அணிவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. எனவே மழைக்காலங்களில் ஷூ, சாக்ஸ் அணிவதில் விலக்கு அளிக்கவேண்டும் என்று கேரள குழந்தைகள் நல ஆணையம் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.


ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மழைக்காலங்களில் ஷூ, சாக்ஸ் அணிய மாணவ மணவிகளை கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து மாணவர்களை ஷூ சாக்ஸ் அணிய கட்டாயப்படுத்தக்கூடாது என்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு கேரள குழந்தைகள் நல ஆணைய தலைவர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.