Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 14, 2019

வரலாற்றில் இன்று 14.08.2019

ஆகஸ்டு 14 (August 14) கிரிகோரியன் ஆண்டின் 226 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 227 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 139 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1248 – உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.
1900 -ஐரோப்பிய, ஜப்பானிய, அமெரிக்கக் கூட்டுப் படைகள் பெய்ஜிங் நகரை ஆக்கிரமித்தன.
1908 – முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.
1912 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு அரசை அமைக்க அமெரிக்கக் கடற்படையினர் நிக்கராகுவாவை முற்றுகையிட்டனர்.
1921 – தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.
1937 – ஆறு ஜப்பானிய விமானங்கள் சீனாவினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1945 – பசிபிக் போர் முடிவுற்றது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நட்பு நாடுகளின் விதிகளுக்கமைய ஜப்பான் சரணடைந்தது.
1947 – பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.


1969 – வட அயர்லாந்துக்கு ஐக்கிய இராச்சிய இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
1972 – கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பேர்லின் விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – போலந்தில் தொழிற்சங்கத் தலைவர் லெக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.
2006 – இஸ்ரேல் – லெபனான் போர் முடிவுக்கு வந்தது.
2006 – முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற நான்கு தொடர் குண்டுவெடிப்புகளில் 796 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1867 – ஜோன் கல்ஸ்வோதி, நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவலாசிரியர் (இ. 1933)
1911 – வேதாத்திரி மகரிஷி, இந்திய ஆன்மிகத் தலைவர் (இ. 2006)
1959 – மேஜிக் ஜான்சன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்



இறப்புகள்

1941 – போல் சபாடியே, பிரெஞ்சு வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1854)
1953 – க. சிவபாதசுந்தரனார், யாழ்ப்பாணம் புலோலியூர் சைவப் பெரியார் (பி. 1878)
1958 – பிரெட்றிக் ஜோலியோ, பிரெஞ்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
1979 – என். எம். பெரேரா, இலங்கையின் மாக்சியவாதி
2004 – செஸ்லோ மிலோஸ், போலந்து எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)
2007 – இராம. திரு. சம்பந்தம், தினமணி முன்னாள் ஆசிரியர்

சிறப்பு நாள்

பாகிஸ்தான் – விடுதலை நாள் (1947)
கொங்கோ – விடுதலை நாள் (1960)
பராகுவே – கொடி நாள்