Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 15, 2019

வரலாற்றில் இன்று 15.08.2019

ஆகஸ்டு 15 (August 15) கிரிகோரியன் ஆண்டின் 227 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 228 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 138 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1040 – ஸ்கொட்லாந்தின் மன்னன் முதலாம் டங்கன் மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான்.
1057 – ஸ்கொட்லாந்தின் மன்னன் மக்பெத் மூன்றாம் மால்க்கமுடனான போரில் கொல்லப்பட்டான்.
1915 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
1920 – வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் சரணடைந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: கொரியா விடுதலை பெற்றது.
1947 – முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார்.
1947 – இந்தியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று பொதுநலவாய அமைப்பின் கீழ் தனி நாடாகியது. ஜவகர்லால் நேரு முதலாவது தலைமை அமைச்சர் ஆனார்.
1948 – தென் கொரியா உருவாக்கப்பட்டது.
1950 – அஸ்ஸாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் பலி, 5,000,000 பேர் வீடிழந்தனர்.
1960 – கொங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1973 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.
1975 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.


1977 – இலங்கையில் தமிழருக்கெதிரான இனப்படுகொலை நடவடிக்கையான ஆவணிப் படுகொலை ஆரம்பித்தது. 400ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 10,000 பேர் வரை காயமடைந்தனர்.
1984 – துருக்கியில் குர்து மக்கள், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, இராணுவத்திற்கெதிராக கெரில்லா போரை ஆரம்பித்தன்னர்.
2005 – இந்தோனேசிய அரசாங்கத்துக்கும் ஆச்சே விடுதலை இயக்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹெல்சிங்கியில் கைச்சாத்தானது.
2007 – பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1769 – நெப்போலியன் பொனபார்ட், பிரெஞ்சு மன்னன் (இ. 1821)
1872 – அரவிந்தர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஆன்மிகவாதி (இ.1950)
1964 – அர்ஜூன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1961 – சுஹாசினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1975 – ஷேக் முஜிபுர் ரகுமான், வங்காள தேச அதிபர் (பி. 1920)

சிறப்பு நாள்

இந்தியா – விடுதலை நாள் (1947)
தென் கொரியா – விடுதலை நாள் (1948)
கொங்கோ – விடுதலை நாள் (1960)