Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 14, 2019

வங்கியில் வேலை வேண்டுமா? 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு


பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 14 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4336 அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) சார்பில் நடைபெறவுள்ள 9-வது பொது எழுத்துத் தேர்விற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்

தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலியிடங்கள் : 4,336



பணிகள்:

புரபெசனரி அதிகாரி மற்றும் மேலாண்மை டிரெய்னி

பணி மற்றும் பணியிட விபரங்கள்:

1. Allahabad Bank - 500

2. Bank of India - 899

3. Bank of Maharashtra - 350

4. Canara Bank - 500

5. Corporation Bank - 150

9. Indian Bank - 493

10. Oriental Bank of Commerce - 300

11. UCO Bank - 500

12. Union Bank of India - 644

வயது வரம்பு :

01.08.2019 தேதியின்படி 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு முறை : ஆன்லைனில் நடத்தப்படும் முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம்.

விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100

மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.600 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இத்தேர்வு குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற லிங்க்கினை கிளிக் செய்யவும்.

முக்கியத் தேதிகள்

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி : அக்டோபர் 12, 13, 19, 20 ஆம் தேதிகள்



முதன்மை தேர்வு நடைபெறும் தேதி : 30.11.2019

பொது நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.08.2019