Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 16, 2019

வரலாற்றில் இன்று 16.09.2019

செப்டம்பர் 16 (September 16) கிரிகோரியன் ஆண்டின் 259 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 260 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 106 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1795 – ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் கேப் டவுண் நகரைக் கைப்பற்றியது.
1810 – மிகுவேல் ஹிடால்கோ என்ற மதகுரு மெக்சிகோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார்.
1812 – முதலாம் நெப்போலியன் மொஸ்கோவினுள் நுழைந்ததை அடுத்து ரஷ்ய மக்கள் நள்ளிரவில் நகரை தீயிட்டுக் கொழுத்தினர். மொஸ்கோ நகரம் அடுத்த சில நாட்களில் முற்றாக எரிந்தது.
1852 – இலண்டனில் , மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
1887 – மென்பந்தாட்டம் முதன் முதலில் சிக்காகோவில் விளையாடப்பட்டது.
1908 – ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது.
1920 – நியூயோர்க் நகரில் ஜே.பி.மோர்கன் கட்டிடத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1963 – மலாயா, சிங்கப்பூர், மற்றும் போர்ணியோவின் சாபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது.
1970 – ஜோர்தானில் நான்கு பயணிகள் விமானங்கள் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து மன்னர் ஹுசெயின் இராணுவ ஆட்சியை அறிவித்தார்.


1975 – பப்புவா நியூ கினி, அவுஸ்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது.
1978 – ஈரானில் டபாஸ் நகரை 7.5 – 7.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
1982 – லெபனானில் பாலஸ்தீன அகதி முகாங்களான சப்ரா, ஷட்டீலா ஆகியவற்றில் லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
1987 – ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் கைச்சாத்திடப்பட்டது.
2000 – இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.
2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.
2007 – தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1859 – யுவான் ஷிக்காய், சீனக் குடியரசின் அரசுத்தலைவர் (இ. 1916)
1893 – ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி, அங்கேரிய-அமெரிக்க மருத்துவர், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1986)
1916 – எம். எஸ். சுப்புலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2004)
1923 – லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனரும், முதலாவது பிரதமரும் (இ. 2015)
1933 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2014)
1945 – ப. சிதம்பரம், இந்திய அரசியல்வாதி
1950 – மாலன், இந்திய எழுத்தாளர்
1974 – யூலியன் காசுட்ரோ, அமெரிக்க அரசியல்வாதி



இறப்புகள்

655 – முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை)
1394 – எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் (பி. 1342)
1931 – உமர் முக்தார், லிபியக் கல்வியியலாளர் (பி. 1862)
1932 – ரொனால்டு ராஸ், இந்திய-ஆங்கிலேய மருத்துவர், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1857)
2000 – எம். எச். எம். அஷ்ரப், இலங்கை அரசியல்வாதி (பி. 1948)
2007 – ராபர்ட் ஜோர்டான், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1948)
2009 – தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர்
2012 – லூசு மோகன், இந்திய நடிகர் (பி. 1928)

சிறப்பு நாள்

உலக ஓசோன் பாதுகாப்பு நாள்
மெக்சிக்கோ – விடுதலை நாள் (1810)
பப்புவா நியூ கினி – விடுதலை நாள் (1975)

No comments:

Post a Comment