டெங்கு காய்ச்சல்: பள்ளிக்கல்வித்துறை அறிவுரைஅனைத்து பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பற்றி தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணையா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
'மாணவர்கள் அவ்வப்போது கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வகுப்பறைகள், கழிவறையை சுற்றி தண்ணீர் தேங்கினால் மாணவர்கள் தலைமை ஆசிரியருக்கு தகவல் தர வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சுற்றறிக்கையில் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணையா குறிப்பிட்டுள்ளார்.


பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க உத்தரவு


பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் தொடர்பாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவில், பள்ளிகளில் நடைபெறும் காலை வணக்க கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.