Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, September 30, 2019

நவராத்திரி, தீபாவளி - அக்டோபர் மாத முக்கிய விரத நாட்கள் பண்டிகை நாட்கள்


சென்னை: தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் 15 நாட்களும் ஐப்பசி மாதம் 15 நாட்களும் இணைந்துள்ளன. அக்டோபர் மாத முற்பகுதியில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகை நாட்களும், அக்டோபர் இறுதியில் தனத்திரயோதசி, தீபாவளி பண்டிகை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களும் உள்ளன. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட முக்கிய முகூர்த்த நாட்களும் உள்ளன.



அக்டோபர் மாத முக்கிய விரத நாட்கள்:

அக்டோபர் 5 சனி பத்ரகாளி அவதார தினம். இன்று வீட்டில் தேவி பாகவதம் படிக்க நன்மைகள் நடக்கும். தொழில் செய்யும் இடங்களில் சண்டி ஹோமம் செய்யலாம். எதிரிகள் தொல்லை ஒழியும்.

அக்டோபர் 7 திங்கட்கிழமை ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நாள். கல்விக்கு அதிபதியாம் சரஸ்வதியை வணங்க ஏற்ற நாள்.

அக்டோபர் 8 செவ்வாய்கிழமை விஜயதசமி இன்று புது தொழில் தொடங்கலாம். கல்வி பயில சிறந்த நாள்.

அக்டோபர் 13 ஞாயிறு கௌமதி ஜாகர விரதம். இன்று இரவு முழுவதும் கண் விழித்து லட்சுமி பூஜை செய்ய நல்ல நாள்.

அக்டோபர் 18 வியாழக்கிழமை துலா ஸ்தானம் ஆரம்பம் இந்த மாதத்தில் ஸ்ரீ ரங்கம் சென்று ஒரு நாளாவது காவிரியில் நீராடி ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்ய புண்ணியம் கிடைக்கும்.

அக்டோபர் 25 மாலை பிரதோஷ காலத்தில் யமதீபம் ஏற்றலாம். வீட்டில் உள்ளவர்கள் நோய் நொடியின்றி வாழலாம்.



அக்டோபர் 26 சனிக்கிழமை சனி தன திரயோதசி இன்று தங்கம் வெள்ளி வாங்க உகந்த நாள். தன்வந்திரி ஜெயந்தி தன்வந்திரி பகவானை வணங்க நல்ல நாள்.

அக்டோபர் 27 -10-2019 தீபாவளி பண்டிகை

நரகாசூர வதம் நடந்த நாள். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு நல்லெண்ணெய் பூசி வெந்நீர் குளியல் செய்ய வேண்டும். நல்லெண்ணெயில் லட்சுமி தேவியும் வெந்நீரில் கங்கா தேவியும் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.

சூரிய உதயத்திற்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிப்பதுதான் சாஸ்திரம். ஆனால் தீபாவளி நாளில் எண்ணெய் குளியலுக்கு இந்த சாஸ்திரம் தேவையில்லை.



தீபாவளி நாளில் எண்ணெய் குளியல் செய்யாதவர்களுக்கு நரகம் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். எனவே மறக்காமல் எண்ணெய் குளியல் முடித்து புது ஆடைகள் அணிந்து பட்டாசு வெடித்து சுவையான உணவு சாப்பிட நன்மைகள் நடக்கும். மாலையில் லட்சுமி பூஜை செய்ய ஆண்டு முழுவதும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

அக்டோபர் 29 யமத்துவிதியை



இன்றைய தினம் எமனை ஆதாரானை செய்ய வேண்டும். இன்றைய தினம் சகோதரர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும். சகோதரிகளுக்கு புதிய ஆடைகள் எடுத்துக்கொடுத்து அவர்களின் வீட்டில் போய் விருந்து சாப்பிட்டு வாழ்த்த வேண்டும். இதனால் சகோதரி தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். சகோதரன் நீண்ட ஆயுளோடு இருப்பான் என்பது ஐதீகம்.