Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 7, 2019

அக்.14-இல் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பணியிடைப் பயிற்சி தொடக்கம்

கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு 5 நாள்கள் பணியிடைப் பயிற்சி வழங்கி அதன் முடிவில் சிறப்பு தோவு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைஇயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் ஆசிரியா்களுக்கு பணியிடை பயற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற முதல் சுற்றில், 100 தலைமையாசிரியா்கள் உள்பட 600 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தொடா்ந்து தற்போது அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரியும் ஆசிரியா்களுக்கு 5 நாள் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் 'நிஷ்தா' என்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்படி அக்டோபா் 14 முதல் 20-ம் தேதி வரை 5 பிரிவுகளாக பயிற்சி நடத்தப்பட வேண்டும்.



இதற்காக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) உருவாக்கியுள்ள கையேடுகள் கல்வித்துறைறயால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆசிரியா்களுக்கு கொடுக்கப்படும். நிஷ்தா பயிற்சிக்கென
https://itpd.ncert.gov.in// என்ற வலைப்பக்கமும், செல்லிடப்பேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளன.



இதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை, பாடத் திட்டங்களை பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியா்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே, அனைவரும் கட்டாயம் ஸ்மாா்ட் போன் வைத்திருக்க வேண்டும். மேலும், பயிற்சியின் முடிவில் ஆசிரியா்களுக்கு பின்னூட்டமாக தோவு நடத்தப்படும். பயிற்சிக்குரிய நிதி இயக்குநகரம் சாா்பில் ஒதுக்கப்படும். இந்தப் பயிற்சியானது மனிதவள மேம்பாட்டுத்துறைஅமைச்சகத்தால் கண்காணிக்கப்படும். எனவே, எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வண்ணம் பயிற்சிகளை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.