ரூ.18,000 ஊதியத்தில் இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் வேலை


இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் (RITES) காலியாக உள்ள Site Inspector மற்றும் Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Site Inspector பிரிவில் 32 பணியிடங்களும், Junior Assistant பிரிவில் 24 பணியிடங்களும் உள்ள.

கல்வித் தகுதி:

Site Inspector பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்திருக்க வேண்டும். Junior Assistant பணியிடங்களுக்கு பி.காம் மற்றும் பிபிஏ படித்து முடித்திருக்க வேண்டும்.சம்பளம்:

Site Inspector பணியிடங்களுக்கு ரூ.24,000 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். Junior Assistant பணியிடங்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.300 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில் https://rites.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://rites.com/web/images/stories/uploadVacancy/49%20-%2050_19%20finance%20regular%20ad%20JA,%20JM.PDF?fbclid=IwAR2N1D8zqkpQ76_W4AZuaWlEOc7CULMwVEE-mkyMQBhvDZ0lnf3a5Fv7GeY என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-10-2019