ரூ. 19,500 + சம்பளத்தில் கிராம சுகாதார செவிலியர் வேலைவாய்ப்பு


மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்திலிருந்து 1234 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

கிராம சுகாதார செவிலியர் (VHN) : 1234 காலிப்பணியிடங்கள்

கல்வித் தகுதி:

10-வது வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 மாத நோக்கு சுகாதாரப் பணியாளர் படிப்பான MHW முடித்தவர்கள் அல்லது +2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு ANM பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு:

01.07.2019 அன்று 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது வரம்பில் சலுகைகளும் உண்டு.

சம்பளம் :

ரூ. 19,500 முதல் 62,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :
SC/SCA/ST/DAP(PH)/DW பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 300 செலுத்த வேண்டும்.
மற்ற பிரிவை சார்ந்தவர்கள் ரூ. 600 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.mrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.mrb.tn.gov.in/pdf/2019/VHN_2019_Notification_24102019.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி : 13.11.2019